நீலகிரி : நீலகிரியில் மாணவர் சேர்கையை அதிகப்படுத்தி மூடும் நிலையில் உள்ள அரசு ஊராட்சி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மீண்டும் உயிர்பிக்க வேண்டும் என்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் தொகுதி மக்கள் சார்பாக மனு அளித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கெத்தை, தங்காடு, இடுஹட்டி, காந்திநகர் உட்பட 6 அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் மற்றும் இரண்டு உயர்நிலைப் பள்ளிகளில் போதுமான மாணவர்கள் இ்ல்லாததால் செப்டம்பர் வரை புதிய மாணவர்களை சேர்க்கைகள் முயற்சிகளை கல்வி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பள்ளிகள் நிரந்தரமாக மூடும் அபாயம் உள்ளதால், இதை அறிந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தொகுதி மக்களின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் மனு ஒன்றை அளித்தார்.

அப்போது, ஆட்சியர் ஆ.ராசாவிடம் கூறும்போது, பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை. வரும் காலாண்டு தேர்வு வரை அரசு பள்ளிகளின் அருகே உள்ள கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது, எனக் கூறினார்.