கோவை : அனுமதியின்றி செயல்படும் ரேப்பிடோ இருசக்கர வாகன டேக்ஸிக்கு தடை விதிக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.
கோவை : அனுமதியின்றி செயல்படும் ரேப்பிடோ இருசக்கர வாகன டேக்ஸிக்கு தடை விதிக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.
கோவை மாநகரில் கால் டாக்ஸி, ஷேர் ஆட்டோ, தனியார் ஆட்டோக்கள் பெருகி விட்ட நிலையில், ரேப்பிடோ இருசக்கர வாகன டேக்ஸி தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. மொபைல் செயலி மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த ரேப்பிடோ மூலம் பதிவு செய்யப்பட்டால், சவாரிக்கு புக் செய்யப்படும் இடத்தில் பிக்-அப் செய்து எங்கு இறக்கி விடப்படுகிறார்களோ அதற்கான தொகையை செலுத்தும்படி உள்ளது. இது தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது. சொகுசு பேருந்து, ஷேர் ஆட்டோக்களை விட கட்டணமாக குறைவாக உள்ளதால் பெரும்பாலானோர் இதனை உபயோகித்து கொள்கின்றனர். இந்த நிலையில், ரேப்பிடோ டேக்ஸியால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், ரேப்பிடோவை தடை செய்ய வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 5,000-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. அரசு நிர்ணயம் செய்த மீட்டர் கட்டணத்தில் வாகனங்களை இயக்கி வரும் நிலையில், இதனையே தொழிலாக நம்பி வாழ்ந்து வருபவர்கள் ரேப்பிடோ இரு சக்கர வாகன சவாரி கட்டணத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வாதாரத்திற்கே அவதிப்பட்டு வருகின்றனர். அனுமதியின்றி செயல்படும் இதனை தடை செய்ய வேண்டும், என வலியுறுத்தினர்.