கோவை : மோப்பேரிபாளையம் பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளர்களை தரக்குறைவாக நடத்தப்படுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கடந்த 12 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த பணியாளர்களும், உரிய சம்பளம் வழங்காமலும், அங்கு பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்கள் தங்களை தரக்குறைவாக நடத்துவதோடு, தகாத வார்த்தைகளால் பேசுவதால் உரிய நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதன் பின் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறும்போது :- அங்கு பணிபுரியும் ரமேஷ்குமார் என்பவர் தன்னை மேஸ்திரி என்று கூறிக்கொண்டு தங்களை தரக்குறைவாக பேசுகிறார். துப்புரவு செய்யும் இடங்களில் தங்களது பெயரை சொல்லி பணம் பெறுகிறார். மேலும், காலதாமதாக வருவதாகக் கூறி விடுப்பாக அவர் கூறுவதைக் கேட்டு அலுவலர் செயல்படுகின்றார். இது குறித்து செயல் அலுவலரிடம் தெரிவித்தால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. தங்களையும் சக தொழிலாளியாக நடத்திட வேண்டும். தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியமான ஊதியத்தை முறையாக வழங்கிட வேண்டும். தரக்குறைவாக நடத்தும் நபர் மீது மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை வேண்டும், என வலியுறுத்தினர்.