நீலகிரி : கோத்தகிரி அருகே பொதுமக்களின் முயற்சியால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 5-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதால், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் புதிய மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முழுவீச்சில் இறங்கி வருகிறது. இந்த நிலையில், கோத்தகிரி அருகே திம்பட்டி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்த நிலையில், ஆங்கில மோகத்தின் காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்தனர். மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததை அடுத்து, 2002ம் ஆண்டு அந்தப் பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டது.

இதனையடுத்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் சீரிய முயற்சியால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆங்கில வழி கல்வியாக 40 மாணவ, மாணவிகளுடன் திறக்கப்பட்டுள்ள இப்பள்ளியில், இப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மூடும் தருவாயில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மத்தியில், மூடிய பள்ளியை கிராம மக்கள் திறந்திருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.