கோவை : அரசு சார்பில் சார்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி முன்னாள் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : அரசு சார்பில் சார்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி முன்னாள் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஒண்டிப்புதூர் அடுத்து காமாட்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கதிர் மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- கடந்த 2017-18-ம் ஆண்டில் கதிர் மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 193 மாணவர்கள் பயின்றோம். பள்ளிப் படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை அரசு சார்பில் தங்களுக்கு தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினி வழங்கிடவில்லை. தற்போது, பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் கேட்டோம். மடிக்கணினி வழங்குவதற்கான உத்தரவு இதுவரை பெறப்படவில்லை என கூறுகின்றனர். தற்போது, கல்லூரியில் பயிலும் மாணவர்களில் பலர் கம்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப பிரிவு ஆகிய பாடப்பிரிவில் பயின்று வருவதால் மடிக்கணினி அவசியம் தேவைப்படுகிறது. மடிக்கணினி இல்லாத காரணத்தால் பாடபுத்தகத்திற்கு தேவையான தகவல்கள் பெற பிரவுஸிங் செண்டர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினிகள் வழங்கினால் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என வலியுறுத்தினர்.