கோவை : தவறான அறுவை சிகிச்சையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண் மனு அளித்துள்ளார்.
கோவை : தவறான அறுவை சிகிச்சையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண் மனு அளித்துள்ளார்.
கோவை பாப்பநாய்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கர்ப்பப்பை மற்றும் ஹெரினியா பிரச்சனை காரணமாக அவர் பணிபுரியும் மருத்துவனை மருத்துவராக இருந்து தனியாக கிளினிக் நடத்தி வரும் சந்திரகலாவிடம் சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த சிகிச்சைக்காக ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக புவனேஸ்வரி தெரிவித்தார். இருப்பினும், சிகிச்சைக்குப் பின் வயிற்றில் தீராத வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இது குறித்து மருத்துவர் சந்திரலேகாவிடம் தெரிவித்த போது மருந்துகள் கொடுத்து அனுப்பி விட்டதாகவும், ஆனால், வலி குறையாத காரணத்தால் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்ற போது அவரை சோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் பஞ்சு இருந்ததால் மலகுடலில் சீழ் பிடித்து ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
தற்போது உடல்நிலை மோசமாக தான் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறிய புவனேஷ்வரி, இது தொடர்பாக மருத்துவர் சந்திரலேகாவிடம் கூறிய போது தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில், தவறான அறுவை சிகிச்சையால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர் சந்திரலேகா மீது உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி மனு அளித்துள்ளார்.
"தாங்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அறுவை சிகிச்சையின் காரணமாக வேலைக்கு செல்ல முடியாத காரணத்தால் கணவரின் வருமானத்தை மட்டுமே நம்பி வீடு வாடகை, மகனின் கல்வி செலவுகளை சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மருத்துவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்து உள்ளோம். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து உரிய நஷ்ட ஈட்டை பெற்றுத் தர வேண்டும், இவ்வாறு புவனேஸ்வரி கூறினார்.