கோவை : பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படாமல் இருக்க ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் மாயவலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் டீன் ஏஜ் பெண்கள் சிக்கல்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கும், ஒருவேளை சிக்கிக் கொண்டால் தப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் மாயவலை எனும் நிகழ்ச்சி ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உளவியல் நிபுணர் கிருத்திகா தரண், காவல்துறை இணை ஆணையாளர் (சட்டம்-ஒழுங்கு) பாலாஜி சரவணன், வழக்கறிஞர் கே. சுமதி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
சமூக ஊடகங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து உளவியல் ஆலோசகர் கிருத்திகா தரண் பேசும்போது " சமூக வலைதளங்களில் ஒரு போட்டோவைப் பகிர்ந்ததும் இன்பாக்ஸில் வந்து நீங்க அழகா இருக்கீங்க என்று ஒருவர் சொல்கிறார் என்றால், இதை பொதுவெளியில் கமெண்டாக சொல்லாமல் உள்பெட்டியில் தனியாக சொல்வதன் காரணம் என்ன என்பதைப் பெண்கள் யோசிக்க வேண்டும். புகைப்படமோ, வீடியோவோ பகிர்ந்த மறுகணம் அது நம்முடையது அல்ல. அது அந்த சமூக வலைதளத்தின் சர்வர்கள் சென்றுவிடுகிறது. இளம்பெண்கள் தங்களுடைய தோற்றம் குறித்த திறமை குறித்து இன்னொருவருடைய அங்கீகாரத்திற்காக ஏங்கும் மனப்போக்கினை தவிர்க்க வேண்டும். ஒரு ஆணின் கம்யூனிகேஷன் பேட்டர்னை ஸ்டடி செய்ய வேண்டும் உங்களுக்கு குட் மார்னிங் மெஸெஜூகள், கவிதைகள் அனுப்புகிறவர் அதையே பத்து பெண்களுக்கும் அனுப்புவார் என்கின்ற புரிதல் வேண்டும். வீட்டிலோ அலுவலகத்திலோ ரோட்டில் எதிர்ப்படுபவர்களிடமோ புன்னகைத்து குட்மார்னிங் செய்யும் பழக்கம் இல்லாதவர்கள்தான் யாரோ ஒருவருக்கு தினமும் இன்பாக்ஸில் குட்மார்னிங் சொல்வார்கள்.

ஒருவேளை நாம் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டால் கூட அதை நினைத்து முடங்கிப் போய்விடாமல் அதை எதிர்த்துப் போராடி வெல்ல வேண்டும். இணையதளத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி நம்முடைய கலை ஆர்வத்தையும் தொழில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள முடியும். ஏதேனும் நடந்து விட்டால் எப்படி வெளியுலகத்திற்குத் தலை காட்டுவது என முடங்கிக் கிடக்க அவசியமில்லை. ஒவ்வொருவருக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் உள்ளன. நம்மைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது இந்த உலகத்தினுடைய வேலை அல்ல. ஒரு காலத்தில் பிரபல நடிகை ஒருவரின் குளியலறை காட்சி வெளியானது. அதை அவர் மிக அழகாக கையாண்டார். இன்று அவரை யாரும் அந்த குளியலறையை சம்பவத்தோடு தொடர்பு படுத்திப் பார்ப்பதில்லை. அவர் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இணையதளம் ஆபத்தானது என கருதி நல்லவர்கள் பலர் சமூக ஊடகங்களில் இருந்து விலகி விடுவது தான் அது கயவர்களின் கூடாரமாக மாற காரணம். நல்லவர்கள் நிறைய பேர் வந்து நல்ல தண்ணீரை ஊற்றினால் மட்டுமே இணைய தளம் என்பது பாதுகாப்பானதாக இருக்கும் ஆகவே ஒவ்வொருவரும் இணைய தளத்தை ஆரோக்கியமாகப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்," என்றார்.
அடுத்துப் பேசிய காவல்துறை இணை ஆணையாளர் பாலாஜி சரவணன் "பெண்கள் உணர்வுபூர்வமானவர்கள்.

அந்த உணர்ச்சிதான் அவர்களின் பலமும் பலவீனமும். பதின் பருவப் பெண்களை உசுப்பேற்றும் தோழிகள்தான் இத்தகைய ஆபத்தான விஷயங்களில் அவர்களை சிக்க வைத்து விடுகிறார்கள். பொதுவாக தோழியின் அண்ணனுக்கு நண்பர் என்கிற அறிமுகத்தில்தான் பல்வேறு பிரச்சனைகள் நடைபெறுவதைத்தான் காவல்துறை வாழ்வில் அதிகம் காண்கிறேன். ஒருவர் மீது நம்பிக்கை வைத்து பழகுவதற்கு முன்பு பெண்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவேளை பழகினாலும் கூட பார்ட்டி அல்லது வெளி இடங்களில் செல்பி எடுப்பது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை மோசடி செய்து ஒருவரை மிரட்டும் பொழுது அது சட்டப் பிரச்சனையாகி விடுகிறது. ஒருவரை மிரட்டுவது சட்டப்படி குற்றம். பெண்களை பாதுகாப்பதற்காகவே 66ஈ, 67 போன்ற பல சட்டப் பிரிவுகள் இருக்கின்றன.

இயல்பில் யாரும் அடிமைகளாக இருக்க விரும்புவதில்லை ஆனால் விர்ச்சுவல் மெய்நிகர் வாழ்க்கையில் நாம் ஆண்ட்ராய்டின் அடிமைகளாகவே உள்ளோம். வாழ்க்கையில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு ஐந்து நொடிகள் தாமதித்து தனது மனசாட்சியின் குரலை ஒருவர் கேட்க வேண்டும். யாரோ ஒரு கிரிமினல் தன்னை மிரட்டுவதை பெற்றோரிடம் உரிய நேரத்தில் தெரிவிக்காமல் இருப்பதும் காவல்துறையின் உதவியை நாடாமல் இருப்பதும் தான் பிரச்சனையை மேலும் சிக்கலாகி விடுகிறது. பல வழக்குகளில் காவல்துறை பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய எந்த விவரத்தையும் வெளிப்படுத்தாமல் அவர்களைத் துன்புறுத்திய குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறது. பல பெண்களின் துயரங்களைத் துடைத்திருக்கிறது. இத்தகைய வழக்குகளில் காவல்துறை மனிதநேயத்துடனும் அந்தப் பெண்களின் வாழ்க்கையை குறித்து அக்கறையுடன் தான் செயல்படுகிறது. எனவே சட்டத்தின் உதவியையும் காவல்துறையின் உதவியையும் நாட ஒருவர் தயங்கவே கூடாது, என்றார்.
இறுதியாக பேசிய வழக்கறிஞர் சுமதி, இந்த கால பெண்கள் பெற்றோர் விதிக்கும் கட்டுப்பாடுகளைக் கண்டு எரிச்சல் அடைகிறார்கள்.

நான் சரியாகத்தான் இருக்கிறேன் என்னை ஏன் பார்ட்டிகளுக்கு அனுமதிப்பதில்லை என்று கேட்கிறார்கள். எல்லோரும் சரியாக இருக்கும் இடத்தில் நீ இரு போதும் என்று பெற்றோர்கள் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசுவதில்லை. அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் பாராட்டுதல்களையும் அவ்வப்போது தெரிவிப்பதில்லை. இந்த அங்கீகாரத்தையும் பாராட்டையும் இன்னொருவர் வழங்குவார் எனில் அவரை விரும்புவது பெண்களின் இயல்பாகிவிடுகிறது.
காதலிக்க வில்லை என்றால் கையை கிழித்து கொள்வேன் என சொல்பவர் ஒரு மனநோயாளி நீ இல்லை என்றால் நான் செத்துவிடுவேன் என்று மிரட்டுபவர்கள் உணர்ச்சி கொண்டவர் இவர்களோடு வாழ்தல் என்பது யாருக்கும் சாத்தியமில்லை. தன்னுடைய வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் பக்குவமும் திறனும் இல்லாத சூழலில் அதிரடியாக முடிவெடுத்து தங்கள் வாழ்க்கையை அலங்கோலமாக்கி கொண்ட எத்தனையோ பெண்களை தினசரி தொழில் வாழ்க்கையில் சந்திக்கிறேன்.
மிரட்டலுக்கு அடிபணிந்து தினம் தினம் துன்பப்பட்டு மிகப் பெரும் சிக்கலுக்கு ஆளாவதைவிட உண்மையை நமது பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்லலாம். அந்த சமயத்தில் அவர்கள் கோபப்பட்டாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை ஒருபோதும் கைவிட மாட்டார்கள். பிரச்சனைக்கு உரிய தீர்வு என்ன என்பதை ஆலோசித்து நம்மை நிச்சயம் அந்த இன்னலில் இருந்து விடுவித்து விடுதலை செய்வார்கள். பெண்களைப் பாதுகாக்க பல்வேறு சட்டப் பிரிவுகள் உள்ளன. ஆனால் நமது பாடத் திட்டத்தில் இந்த சட்டப் பிரிவுகளை பற்றிய அறிமுகம் இல்லை. பள்ளி கல்லூரிகளிலேயே தங்களை பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளை பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம், எனக் கூஆரினார்.

நிகழ்வினை எழுத்தாளர் செல்வேந்திரன் தொகுத்து வழங்கினார். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.