கோவை : மேட்டுப்பாளையம் அருகே 3 இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் தனியார் பேருந்தில் மோதி. விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நியூ எக்ஸ்டன்சன் வீதியை சேர்ந்தவர் செந்தில். இவர் காரமடையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் பட்டபடிப்பை தற்போது தான் முடித்துவிட்டு சான்றிதலுக்காக காத்துக்கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை செந்தில் தனது நண்பர்கள் இருவருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகைக்கு சென்றுள்ளனர். அப்போது, சிறுமுகையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி 5 எண் கொண்ட தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது.
பேருந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள சந்தக்கடை என்ற இடத்தின் அருகே வந்த போது, பேருந்தின் மீது அவர்கள் வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் தூக்கி வீசபட்டனர். இந்த சம்பவத்தில் செந்திலுக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், காயமடைந்த மற்ற இருவர் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் விபத்து நடந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை திருப்பியதே விபத்துக்கு காரணம் என நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். ஹெல்மட் அணிந்திருந்தால் உயிரிழப்பு தடுத்திருக்கலாம் எனவும் அவர்கள் கூறினர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.