கோவை : தென்மேற்கு பருவமழை துவக்கம் காரணமாக காடுகளை விட்டு இடம் பெயரும் பட்டாம்பூச்சிகள், சமதள பரப்பை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகள் என்பது அடர்ந்த வனப்பகுதியாகும். பல்வேறு அரிய உயிரினங்கள் வாழும் இந்த வனத்தில் வண்ணத்துபூச்சிகளும் அடங்கும். தமிழ்நாட்டினை பொறுத்தவரை மொத்தம் 324 வகையான வண்ணத்துபூச்சிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சுமார் 199 வகையான வண்ணத்துபூச்சிகள் மேட்டுப்பாளையம் கல்லார் வனப்பகுதியில் உள்ளது. இதில், மிகவும் அரிதாக பார்க்கப்படும் புளு டய்கர், டார்க்புளு டய்கர், டபுள் பிரேண்டேடு குரோ, காமன் குரோ என அரியவகைகளும் அடங்கும். பருவ மழை காலங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் வண்ணத்துபூச்சிகளின் இடப்பெயர்ச்சியானது இவ்வாண்டு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி மே இறுதிவரை இருந்தது.

தற்போது தென் மேற்கு பருவமழை துவங்க இருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலையில் கேரள காடுகளை ஒட்டி அமைந்துள்ள மேட்டுப்பாளையம் காடுகளை விட்டு வண்ணத்துபூச்சிகள் இடம் பெயர துவங்கியுள்ளன. வடகிழக்கு பருவமழை காலங்களில் சமதள பரப்பில் இருந்து காடுகளை நோக்கி மேலே செல்லும் வண்ணத்துபூச்சிகள், தற்போது கேரளாவில் துவங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் காடுகளில் உள்ள மலைப்பகுதியினை விட்டு சமதள பரப்பளவை நோக்கி நகரத் துவங்கியுள்ளன. இதனால், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் தோட்டக்கலை பண்ணையில் தற்போது பட்டாம் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு கோவையில் போதிய மழையின்மையால் குறைந்த அளவிலான பட்டாம்பூச்சிகளே காணபட்டதாகக் கூறும் பட்டாம்பூச்சி ஆர்வலர்கள், “குறைந்த அளவில் காணப்பட்டாலும் அதிக நாட்கள் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் இருந்தன. தற்போது பருவமழை துவக்கம் காரணமாக இடம் பெயரும் பட்டாம் பூச்சிகள் மீண்டும் வடகிழக்கு பருவமழையின் போதும் இடம் பெயரும்,” என தெரிவித்தனர்.