நீலகிரி : வடமாநிலத்தில் தேயிலை உற்பத்தி துவங்கியதன் காரணமாக குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

குன்னூர் தேயிலை ஏல மையத்தில் கடந்த ஜனவரியில் இருந்து ஐந்து மாதங்களில் இதுவரை இல்லாத அளவு, மிகவும் குறைந்த அளவில் 95 ரூபாய் 32 காசுகள் சராசரி விலை கிடைத்துள்ளது. பொதுவாக, அதிக விலை கேட்டால் விற்பனை அளவு குறைந்துவிடும்.

கடந்த ஆண்டு டிசம்பர் 1-ல் இருந்து வடமாநிலத்தில் உற்பத்தியை நிறுத்த தேயிலை வாரியம் உத்தரவிட்டது. அப்போது, வர்த்தகர்கள் தென்னகத்திற்கு அதிகம் வந்து நீலகிரி தேயிலையை கொள்முதல் செய்தனர். இதனால், விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. தற்போது, வட மாநில தேயிலை வரத்து அதிகரித்ததால், நீலகிரி தேயிலை விற்பனை குறைந்தது. இதனால், விலை குறைந்து காணப்படுவதாக தேயிலை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.