நீலகிரி : நீலகிரி பகுதியில் விளையும் கேரட்களில் கணிசமான அளவு அழுகல் காணப்படுவதாலும், போதிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக, மலை காய்கறி அதிக பரப்பளவில் பயிரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். உதகையில் கேத்தி, கோத்தகிரி பகுதிகளில், குறிப்பாக, நெடுகுளா, மிளிதேன், வ.உ.சி. நகர், கூக்கல்தொரை மற்றும் கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் கேரட் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, மண்டிகளில் மொத்த விலையாக ஒரு கிலோ கேரட் 35 முதல் 40 ரூபாய்க்கும், உள்ளூர் மார்க்கெட்களில் 55 ரூபாய் முதல் 60 ரூபாயிக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனைக்காகக் கொண்டு வரும் மூட்டைகளில் பாதியளவு வரை அழுகி வீணாகி விடுவதால் கொள்முதல் விலை கிடைப்பதிலும் சிக்கல் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விலை, இடுபொருட்களின் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட செலவினங்களை கணக்கிட்டால், போதுமானதாக இல்லை என்றாலும், இனிவரும் காலங்களில் கேரட்களுக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்பிருப்பதால் விவசாயிகள் அதிக அக்கறையுடன் தோட்டங்களை பராமரித்து வருகின்றனர்.