கோவை : கோவை - அவிநாசி சாலையில் போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்த புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதில் இதுவரை 57 நபர்களிடம் இ-செல்லான் மூலம் 94 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல, சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தை ஓட்டுபவர்களால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை ஓட்டும் ஒவ்வொரு தனி மனிதர்களின் செயல்பாட்டால் ஒரு குடும்பம், ஒரு சமூகம், ஒரு நாடு என பாதிப்புகள் ஒருவரை ஒருவர் சார்ந்து உள்ளது. இப்படி சாலை போக்குவரத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தற்போது மாநகர காவல் துறையினர் உயிர் அறக்கட்டளை உதவியுடன் புதிதாக கோவை - அவிநாசி சாலையில் ஜே.எம். பேக்கரி சிக்னலில் இருந்து லட்சுமி மில் சிக்னல் வரை 5 ஸ்மார்ட் கேமராக்களை அமைத்துள்ளனர். இந்த கேமராக்கள் அமைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சிக்னலை மதிக்காமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், விதிகளுக்கு அப்பாற்பட்டு இருசக்கர வாகனத்தில் அதிக நபர்களை ஏற்றிச் செல்லுதல், காரில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல் விதியை மீறி வாகனங்களை இயக்கிய 57 நபர்களிடமிருந்து 94 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கடந்த ஐந்து மாதத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக போடப்பட்ட 1,93,728 வழக்கில் 3 கோடியே 50 லட்ச ரூபாய் வசூலிக்கபட்டுள்ளது. தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபட்ட 10 ஆயிரத்து 868 பேருடைய ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யக்கோரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்ததில் 2,271 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சிக்னலை மதிக்காமல் வாகனம் இயக்கிய 8,460 பேரிடமிருந்து 6,77,900 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மதுபோதையில் வாகனம் இயக்கியதாக 1,455 பேரிடமிருந்து 95 லட்சத்து 21,350 ரூபாயும், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் இயக்கியதாக 1260 பேரிடம் இருந்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 400 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இப்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியது என கடந்த ஐந்து மாதங்களில் விதி மீறி வாகனம் இயக்கியவர்களிடமிருந்து மூன்று கோடியே 50 லட்ச ரூபாயை அபராதமாக பெற்றுள்ளனர்.