நீலகிரி : அ.தி.மு.க. இரட்டை தலைமைக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும், இரு மாதத்தில் ஆட்சி கவிழும் என உதகையில் ஆ. ராசா தெரிவித்தார்.

உதகையில் தி.மு.க., தலைவர் கலைஞரின் 96-வது பிறந்த நாள் விழா மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆ.ராசா நன்றி தெரிவிக்கும் கூட்டமும் உதகை நகர தி.மு.க., சார்பில் நடத்தப்பட்டது. ஏ.டி.சி., சுதந்திர திடலில் நடந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கலந்துக் கொண்ட எம்.பி., ராசா பேசியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் மூன்றாவது முறையாக போட்டியிட்ட என்னை வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். நீலகிரி மாவட்ட மக்களுக்கு எனது நன்றி. நீலகிரி உதகை, குன்னூர், கூடலூர், பவானிசாகர், மேட்டுப்பாளையம் மற்றும் அவிநாசி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உதகை சட்டமன்ற தொகுதியில் தான் எனக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. அ.தி.மு.க., வேட்பாளரை காட்டிலும் 40 ஆயிரம் வாக்குகள் எனக்கு அதிகம் கிடைத்துள்ளது. இதற்கு உதகை சட்டமன்ற தொகுதி மக்களுக்கு எப்போதும் நான் கடமைப்பட்டவனாக இருப்பேன். தமிழகத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சிறந்த கூட்டணி அமைத்ததன் மூலம் பா.ஜ.க.,விற்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் உள்ள தலைவர்கள் முறையாக கூட்டணி அமைக்கவில்லை. இதனால், பா.ஜ.க., வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க.,விற்கு வாக்களித்த மக்கள் ஓராண்டிற்குள் ஏன் வாக்களித்தோம் என்ற நிலையை பா.ஜ.க., உருவாக்கும்.
தமிழகத்தில் பா.ஜ.க., தயவில் ஒரு ஆட்சி நடந்து வருகிறது. இங்கு இரு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. தற்போது இந்த இரு தலைமைக்கு எதிர்ப்பு மதுரையில் கிளம்பியுள்ளது. இது விரைவில் கோட்டையில் எதிரொலிக்கும். இரு மாதங்களில் இந்த ஆட்சி கவிழும். அதன்பின், தி.மு.க., ஆட்சி பிடிக்கும். அப்போது, தி.மு.க.,வில் பல்வேறு அமைச்சர்கள் வருவார்கள். அப்போது மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். நான் 5 ஆண்டுகள் எம்.பி.,யாக மட்டுமே தான் இருக்க முடியும். எனினும், எம்.பி., வளர்ச்சி நிதியை கொண்டு நீலகிரி தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன். சமவெளிப் பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் நீலகிரி மக்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில், மேட்டுப்பாளையத்தில் ஒரு அலுவலகம் திறந்துள்ளேன். மக்கள் இந்த அலுவலகத்திற்கு வந்து குறைகளை தெரிவிக்கலாம்.
நாடாளுமன்றம் மற்றும் கட்சி பணிகள் உள்ளதால், மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ மக்களை சந்தித்து குறைகளை கேட்பேன். ஆளுங்கட்சியாகவோ அல்லது அமைச்சராகவோ இல்லை என்றாலும், மக்களை நான் தொடர்ந்து சந்திப்பேன், என்றார்.