கோவை : கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 450 கிலோ எடையுள்ள ரேசன் அரிசியை வட்டாட்சியர் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ரேசன் அரிசி கேரளாவிற்கு கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனி வட்டாட்சியர் பறக்கும் படையினர் பொள்ளாச்சி இருந்து கோபாலபுரம் சாலை திம்மங்குத்து பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் ரேசன் அரிசி கடத்தி வந்தவர்கள் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து, ரேசன் அரிசி கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மாவட்ட ஆட்சியரிடம் உத்தரவின் பெயரில் மாவட்ட வழங்கல் அதிகாரி குமரேசன் அறிவுறுத்தலின்படி வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டதாகப் பறக்கும் படை தனி வட்டாட்சியர் சிவக்குமார் தெரிவித்தார்.