கோவை : கோவையில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாரின் உத்தரவுப்படி நேற்று காலை 9 மணிக்கு பேரூர் உட்கோட்டம், தொண்டாமுத்தூர் பகுதிகளில் ஆலாந்துறை காவல்நிலைய ஆய்வாளர் தங்கம் தலைமையில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. கெம்பனூர் சாலையில் தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதுட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, இடத்தின் உரிமையாளர் கே.ஆர். மணிகண்டன் (72), மணிமுருகன் (30), சவுந்தரராஜ் (58), சம்பத்குமார் (41), முத்துச்சாமி (40), பெருமாள் (50), பாபு (32), ரவி (54), முருகேசன் (39), பிரதீஷ் (34), ரகுபதி (59), லிங்கம் (60), பண்டாரசாமி (58) உள்ளிட்ட 13 ரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாரின் உத்தரவுப்படி, கோவை மாவட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.