கோவையில் பீர் கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு : நிபா வைரஸ் சோதனை கெடுபிடிகளால் கொட்டியதாக லாரி ஓட்டுநர் பதில்

கோவை : காளப்பட்டி அருகே உள்ள குளத்தில் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பீர் கழிவுகளைக் கொட்ட இருந்த நிலையில் பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கோவை : காளப்பட்டி அருகே உள்ள குளத்தில் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பீர் கழிவுகளைக் கொட்ட இருந்த நிலையில் பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகளில் வெளி மாநிலங்களில் இருந்து கழிவுகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதில். குறிப்பாக கேரளா எல்லைப் பகுதிகளான மதுக்கரை, க.க சாவடி, போன்ற பகுதிகளில் கோழிக்கழிவு உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து கொட்டப்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதில், சரவணம்பட்டி பகுதியிலும் அடிக்கடி மோசமான கழிவுகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.



இந்த நிலையில், இன்று காலை கோவை காளப்பட்டி அடுத்த வெள்ளானைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள குளத்தில் லாரியில் கொண்டு வந்த கழிவுகளை கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் கொட்ட முயன்று வந்தனர். இதையடுத்து, தகவலறிந்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து, காவல்துறையினருக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை செய்ததில் லாரியில் பீர் கழிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது. 

மேலும், கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸால் கேரள எல்லைகளில் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரித்துள்ளது. இதனால், அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படையில் கோவையில் கொட்டி விட்டோம் என தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் இந்தப் பகுதிகளில் அடிக்கடி கழிவுகள் கொட்டப்பட்டு தான் வருகிறது என தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...