கோவையில் 'ஜி.எம்.சி.வி. 2030' உலகளாவிய உற்பத்தி மாநாடு

கோவை : உலக அளவில் இந்திய உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காணும் வகையிலான உலகளாவிய உற்பத்தி மாநாடு கோவையில் நேற்று நடைபெற்றது.

கோவை : உலக அளவில் இந்திய உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காணும் வகையிலான உலகளாவிய உற்பத்தி மாநாடு கோவையில் நேற்று நடைபெற்றது. 



இன்டெக் மற்றும் கொடிசியா கூட்டமைப்பு சார்பில் சர்வதேச அளவிலான உலகளாவிய உற்பத்தி மாநாடு ஓட்டல் ரேடிசன் ப்ளூவில் நேற்று நடைபெற்றது. உலக அளவில் இந்திய உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டு, அதனை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. இதில், கொடிசியாவின் தலைவர் ஆர். ராமமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 



அவர் பேசியதாவது :- நாட்டின் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் மையம் கொடிசியாவில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், ஓசூர், கோவை நகரங்களை இணைக்கும் வகையிலான ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி ஆயோக்கின் அடல் இன்குபேஷன் சென்டரும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கோவையில் கொடிசியா 2 தொழிற்பூங்காக்களை மேம்படுத்தியுள்ளது. மொத்தம் 375 ஏக்கர் பரப்பளவில் 320 தொழில் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த பூங்காக்களில் மொத்தம் ரூ. 3,000 கோடி முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



உலகளாவிய தயாரிப்பு கூட்டுப்பார்வையில் ஜி.எம்.சி.வி. 2030 மாநாட்டின் நோக்கமானது, இந்திய உற்பத்தியாளர்களுக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்து தர வேண்டும் உள்பட பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்படுவதே ஆகும். புதுமையான சிந்தனை, முயற்சி மற்றும் தொழில் ஆகியவற்றை உள்ளடக்கியது ஜி.எம்.சி.வி. 2030. அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் தயாரிப்பு தொழில்நிறுவனங்களும் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். ஒரு நாடு, ஒரு இடம் என்ற நிலையில் இருந்து பல நாடு, பல இடம் என நிறுவனங்கள் அமைந்திருக்கும், என்றார். 



மாநாட்டின் தலைவர் ஜெய்ராம் வரதராஜன் கூறுகையில், "சர்வதேச சந்தைகளில் இருக்கும் வேகத்தை நிலைப்படுத்த விநோதமான தயாரிப்புகள் அவசியமாகின்றன. வளர்ச்சிக்கான மாற்றுவழி என்பது மெதுவானதாகும். எனவே, சவால்மிக்க சந்தைகளில் நிலைத்து நிற்க நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தியா சரியான பக்கத்தில் இல்லை. இந்தியர்கள் நமது திறமைகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். நமது திறமைகளை உயர்ந்த விலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்," எனக் கூறினார். 



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...