தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து உதகையில் தி.மு.க. அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

நீலகிரி : நகைக்கடன், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி தி.மு.க. எம்.பி.யின் அலுவலகத்தை பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி : நகைக்கடன், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி தி.மு.க. எம்.பி.யின் அலுவலகத்தை பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



நீலகிரி மாவட்டத்தில் மக்களவை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆ.ராசா இன்று நன்றி தெரிவிப்பதற்காக உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்திப்பதற்காக வருகை தந்திருந்தார். அந்த நேரத்தில், மக்களவை உறுப்பினர் அலுவலகப் பகுதிக்கு அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் குவிந்திருந்தனர். அப்போது, நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன், கல்விக் கடன் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்வதாகக் கூறி வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுவிட்டு, தற்போது ஆ. ராசா இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தி.மு.க., எம்.பி. அலுவலகம் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்து வைத்து அங்கிருந்து அனுப்பினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...