மதுக்கரை அருகே சிறுத்தைப் பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைப்பு

கோவை : மதுக்கரை அருகே நடமாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

கோவை : மதுக்கரை அருகே நடமாடி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. 

மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பாலக்காடு மெயின் ரோடு அருகே அண்மையில் குட்டிகளுடன் சிறுத்தை நடமாடி வந்தது. இது, மதுக்கரை குடியிருப்பு வாசிகள் வளர்த்தி வந்த கால்நடைகளை வேட்டையாடி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த வனத்துறையினர், குட்டிகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அதனை பிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், சிறுத்தையின் குட்டிகள் உருவத்தில் பெரியதாகவும், தனியே வேட்டையாடும் அளவிற்கு வளர்ந்து விட்டதால், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். 



அண்மையில் காந்திநகர் அருகே உள்ள வீட்டின் சுற்றுச்சுவரைத் தாண்டிச் சென்று வளர்ப்பு நாயை தாய் சிறுத்தை வேட்டையாடிச் சென்றது. இதையடுத்து, அந்த வீட்டின் அருகே வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். இந்தக் கூண்டில் சிறுத்தை அகப்பட்டுவிட்டால், அதனை சிறுமுகை வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மதுக்கரை பகுதியில் சிறுத்தைக்காக 4-வது முறையாகக் கூண்டு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...