கோவை : பொள்ளாச்சியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக பார் நாகராஜ் உள்ளிட்ட 14 பேரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சுந்தராபுரம் விநாயகர்கோயில் வீதியை சேர்ந்தவர் சிபின் (21). இவர் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் பொள்ளாச்சி ஊத்துக்காடு சாலையைச் சேர்ந்த சபரீஷ் (23) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சபரீஸ் சிபினிடம் தனக்கு தர வேண்டிய பணத்தை நீண்ட நாட்களாகக் கேட்டு வந்துள்ளார். ஆனால், சிபின் பணத்தை தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இந்த சூழலில், சிபின் வளர்த்து வந்த ‘பக்’ ரகத்தை சேர்ந்த விலை உயர்ந்த நாயை சபரீஸன் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார். மேலும், காணாமல் போன நாயை சிபின் பல நாட்களாக தேடி வந்துள்ளார்.
இந்த நிலையில், சபரீஸ் வீட்டில் தனது நாய் இருப்பதை அறிந்து, அங்கு சென்ற சிபின் தனது நாயை தரக்கோரி கேட்டதால் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சபரீஸ்க்கு ஆதரவாக அருண் கார்த்திக் (27), பார் நாகராஜ் (28), மாரிமுத்து (24), வசந்த் (19), சபரீஸ்வரன் (23) சுலைமான் (19), அய்யனார் (17) ஆகியோரும், சிபினுக்கு ஆதரவாக அனுப் (21), சந்தோஷ் விக்ரம் (21), நவ்சாத் (21), ராகவேந்திரா (21), கனகராஜ் (20) ஆகியோர் மக்கள் நடமாட்டம் உள்ள ஜோதிநகர் பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது, இரு குழுக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்தக் குழு மோதலில் அந்தப் பகுதியில் உள்ள இரு சக்கர வாகனங்களை உடைத்தனர்.
இந்த நிலையில், சிபின் கொடுத்த புகாரின் பேரில் பார் நாகராஜ் உள்ளிட்ட 8 பேர் மீதும் சபரீசன் கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் மீதும் என மொத்தம் 14 பேர் மீது பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.