கோவை : காவிரியில் இருந்து தண்ணீர் பெற்றுத்தர தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற எம்.பி.க்கள் முயற்சிப்பார்கள் என்ற தமிழக முதலமைச்சரின் பேச்சு விஷமத்தனமானது என திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கே. சுப்பராயன் விமர்சித்துள்ளார்.
கோவை : காவிரியில் இருந்து தண்ணீர் பெற்றுத்தர தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற எம்.பி.க்கள் முயற்சிப்பார்கள் என்ற தமிழக முதலமைச்சரின் பேச்சு விஷமத்தனமானது என திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கே. சுப்பராயன் விமர்சித்துள்ளார்.
கோவை ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஆட்சியில் இருப்பதோடு, மத்திய பா.ஜ.க. அரசுடன் இணக்கமாக உள்ள அ.தி.மு.க., மேகதாதுவில் அணை கட்டுவோம் என்ற கர்நாடக அரசின் அறிவிப்பை எதிர்த்து போராடுவதை தவிர்த்துவிட்டு, காவிரியில் இருந்து தண்ணீர் பெற்றுத்தர தமிழகத்திலிருந்து வெற்றி பெற்ற எம்.பி.க்கள் முயற்சிப்பார்கள் என முதலமைச்சர் விஷமத்தனமாக பேசி வருகிறார். நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் 3 பேர் பலியாகியுள்ளதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை நடந்த நீட் தேர்வுகளில் 20 ஆயிரம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரும், 60 ஆயிரம் பொதுப்பிரிவினரும், 7 லட்சம் முற்பட்ட வகுப்பினரும் வெற்றி பெற்றுள்ளதாக வரும் தகவல்கள், ஆயிரம் ஆண்டுகளாக கற்பதையும், கற்பிப்பதையும் தொழிலாக கொண்ட பிராமணர்களுடன் கல்வியில் போட்டிக்கு வரக்கூடாது என்பதற்காகவே வர்ணாசிரம நோக்கத்துடன் நீட் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக பிற்படுத்தப்பட்ட மக்கள் பொதுப்பிரிவினருடன் ஒன்றுபட்டு போராட வேண்டும் என கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். பா.ஜ.க. மான் அல்ல, மாரீசன் என்பதை மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள். 60 ஆண்டுகளாக கட்டிக்காத்த 245 பொதுத்துறை நிறுவனங்களின் தற்போதைய நிலை என்ன..?. அவற்றின் பங்குகளை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்த மத்திய அரசு தயாரா...?. இந்திய சந்தைகளில் இருந்து இந்தியப் பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு, வெளிநாட்டுப் பொருட்களை நிரப்பியுள்ளது தான் தேசபக்தியா..?.

நாடு முழுவதும் பல லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கிய 6 லட்சம் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை சிறுகுறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்திற்கு எதிராக திட்டமிட்டு ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களை மறைமுகமாக மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. மும்மொழி கொள்கையால் தமிழகத்தில் தமிழைப் படிக்காமல் பட்டம் பெறலாம் என்ற நிலை உருவாகக் கூடாது. 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளில் பா.ஜ.க. முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பாமர மக்களிடம் உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெறும் கட்சியின் தேசிய கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும், என அவர் அப்போது தெரிவித்தார்.