கோவை : கோவையில் மாற்றுத்திறனாளி பெண் மற்றும் அவரது சகோதரிகளிடம் ரூ. 84 லட்சம் மோசடி செய்த நபரை கோவை மாநகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை : கோவையில் மாற்றுத்திறனாளி பெண் மற்றும் அவரது சகோதரிகளிடம் ரூ. 84 லட்சம் மோசடி செய்த நபரை கோவை மாநகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாநகர பீளமேடு லட்சுமிபுரத்தில் வசிப்பவர் லதா தங்கம். போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இவர் 2 கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு சாந்தி தங்கம், ராணி தங்கம், ஷுலா தங்கம், சுஜா தங்கம். இவர்களில் சாந்தி தங்கத்தின் மகன் ரிட்ரிக் மூலமாக அறிமுகமான சென்னையைச் சேர்ந்த ஜெயகார்த்திக் என்பவர் ஆன்-லைன் மூலம் வியாபாரம் செய்து வருவதாகவும், இதில் முதலீடு செய்தால் நல்ல இலாபம் ஈட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்பேரில், ரூ. 84 லட்சம் பெற்றுக் கொண்டு, சிறிது காலம் இலாபத் தொகையை லதா தங்கம் குடும்பத்திற்கு ஜெய் கார்த்திக் கொடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து, சிறிது நாட்களிலேயே சாந்தி தங்கத்திற்கு சொந்தமான காரை எடுத்துக் கொண்டு ஏமாற்றி சென்று விட்டார். பின்னர், இது தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐபிஎஸ் மற்றும் குற்றப் பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் ஐபிஎஸ் அவர்களின் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் சந்திரசேகரன் மற்றும் ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான போலீசார் ஜெய் கார்த்திகை கைது செய்தனர். கைது செய்த குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.