கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடக்கம் : திருச்சூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

கோவை : கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கவுள்ளதை முன்னிட்டு, திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை : கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கவுள்ளதை முன்னிட்டு, திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கோடை வெயில் காரணமாக வறட்சி நிலவி வரும் சூழ்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்குவது தாமதமாகி வந்தது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, கேரளாவில் தென்மேற்கு பருவமழை 24 மணி நேரத்திற்குள் தொடங்குகிறது. 

இது தொடர்பாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது :- தென்மேற்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை 24 மணிநேரத்திற்குள் தொடங்கும். குறிப்பாக. வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் கேரளாவின் திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கனமழை பெய்யக்கூடும். அதனால், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவின் தலைநகர் பகுதியான திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கூறிய இடங்களில் நாளை முதல் மழைப் பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...