கோவை : கோவை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள் 2 முறையே இன்றும், நாளையும் நடக்கிறது.
கோவை : கோவை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள் 2 முறையே இன்றும், நாளையும் நடக்கிறது.

கோவை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் ஆசியர் தகுதித் தேர்வு, கோவை மாவட்டத்தில் முதல் தாள் 16 மையங்களில் 6,053 பேரும், இரண்டாம் தாள் 32 தேர்வு மையங்களில் 12,113 பேரும் தேர்வு எழுத உள்ளனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களும், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் என தலா 32 அதிகாரிகளும், 650 அறை கண்காணிப்பாளர்களும், 200 சோதனையிடுபவர்கள் மற்றும் சொல்வதை எழுதுபவர் 30 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கண்பார்வையற்றோர் மற்றும் மனநல குன்றிய தேர்வர்கள் முதல் தாளில் 5 பேர் மற்றும் இரண்டாம் தாளில் 26 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.
இந்த நிலையில், புனித காணிக்கை அன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற இந்த தேர்விற்கு 6,053 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 5,252 தேர்வர்கள் மட்டுமே தேர்வெழுதினர். எனவே, இத்தேர்வை கோவை மாவட்டத்தில் எழுதியவர்கள் 86.76 சதவீத ஆகும். இன்று நடைபெற்ற தேர்வானது எந்தவித முறைகேடுகளும் இன்றி அமைதியான முறையில் சிறப்பாக நடைபெற்றது என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.