கேரளா : கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
கேரளா : கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
இரண்டாவது முறையாக அமோக வெற்றிப் பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சியமைத்துள்ளது. இந்த நிலையில், விமானம் மூலம் கொச்சி வந்தடைந்த அவர், கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் நடத்தினார். அப்போது, அங்கு எடைக்கு எடை துலாபாரத்தில் தாமரை மலர்களை பிரதமர் மோடி கொடுத்தார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கோவிலில் தரிசனம் செய்த பின்னர், குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.