சென்னை : தமிழகத்தில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள், கடைகள் ஆகியவை தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் இயங்குவதற்கான அரசாணை கடந்த 28-ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான அறிவிப்பாணை இன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், வணிக நிறுவனங்கள், கடைகள் 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், திரையரங்குகளும் தமிழகத்தில் 24 மணி நேரமும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், சினிமா ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.