கொச்சின் துறைமுகத்திற்கு கோவை முக்கிய வர்த்தக ஸ்தலமாக திகழ்கிறது : கொச்சின் துறைமுக தலைவர் தகவல்

கோவை : கொச்சின் துறைமுகத்திற்கு கோவை முக்கிய வர்த்தக ஸ்தலமாக விளங்கி வருவதாக கொச்சின் துறைமுக தலைவர் பீனா தெரிவித்துள்ளார்.

கோவை : கொச்சின் துறைமுகத்திற்கு கோவை முக்கிய வர்த்தக ஸ்தலமாக விளங்கி வருவதாக கொச்சின் துறைமுக தலைவர் பீனா தெரிவித்துள்ளார். 



இந்திய தொழில் வர்த்தக சபையின் சார்பில் உற்பத்தி தொடர்பாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் கொச்சின் துறைமுக தலைவர் பீனா கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது :- கொச்சின் துறைமுகத்திற்கு சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதில் கோவை முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது, கோவையில் இருந்து மட்டும் சுமார் 25 சதவீதம் கொச்சின் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதியும், இறக்குமதியும் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 5,000-க்கும் மேற்பட்ட கண்டெய்னர்களில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு கொச்சின் துறைமுகம் 9 சதவீதம் வளர்ச்சி பெற்றது. தற்போது, நடப்பாண்டின் 2 மாதங்களில் மட்டும் 11 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.



கோவைக்கு மிகவும் அருகாமையிலும், சர்வதேச நாடுகளுக்கான நெருக்கமான வழித்தடமாகவும் கொச்சின் துறைமுகம் விளங்குகிறது. நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி மையமாக இருக்கிறது. தென்னிந்தியாவில் சுமார் 90 ஆண்டுகளாக கொச்சின் துறைமுகம் தனது பங்களிப்பை அளித்து வருகிறது. எனவே, கொச்சின் துறைமுகத்தின் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர், எனக் கூறினார்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...