கோவை : சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச உணவு பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கோவை மாநகராட்சியின் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் ஆர்ய வைத்திய பார்மஸியின் சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

ராமநாதபுரம் அருகே உள்ள ஆயுர்வேதிக் அறக்கட்டளையின் கருத்தரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரி வி. காமராஜ், மற்றும் அவரது குழு அதிகாரிகளான வி. சுப்புராஜ், எஸ். வேலுசாமி, ஆர். மகாராஜன் ஆகியோர் தரமான உணவுகள் மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள விலைப் பட்டியலில் இருக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி எடுத்துரைத்தனர். இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற 50 பேரும் உணவு பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.