கோவை : கோவை மாநகராட்சி, கவுண்டம்பாளையம், துடியலூர் ஆகிய பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகிக்கும் பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம், சிறுவாணி கூட்டுக்குடிநீர் திட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் என 13 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் ஆகியோரின் ஆணையின்படி, தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை விழிப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக வழங்கப்படும் குடிநீர் திட்டங்களின்படி, அனைத்து திட்டங்களிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் கடைக்கோடி குடியிருப்புகள் வரை சென்றடைவதை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த உள்ளாட்சி அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், கோவை மாநகராட்சி வார்டு எண் 8-ல் மூவர் நகரிலும், வார்டு எண். 43 சுப்பிரமணியபுரத்திலும், வார்டு எண்.1லும், துடியலூர் பகுதியிலும் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதை நேரில் ஆய்வு செய்தனர். குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா..? எனவும், குளோரின் கலந்து வழங்கப்படுகிறதா..? எனவும் பொதுமக்களிடம் நேரில் கேட்டறிந்தனர். அத்துடன் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் சீரான முறையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்யுமாறு மாநகராட்சி கள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, துடியலூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக கருத்துகளைக் கேட்டறிந்ததுடன், புற நோயாளிகளின் வருகை, ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள சிகிச்சை கருவிகள், சுகாதாரம் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அத்துடன் வெளிநோயாளிகளுக்கும், பிரசவத்திற்கு வரும் தாய்மார்களுக்கும் தரமான சிகிச்சை அளித்திட கேட்டுக்கொண்டார்.