கோவை : கோவையில் தனியார் நிறுவனத்தின் நடப்பு கணக்கிலிருந்து கடந்த ஆண்டு ஸ்கிம்மர் கருவி மூலம் திருடப்பட்ட 80 ஆயிரம் ரூபாயை வங்கி நிர்வாகம் தராமல் காலதாமதம் செய்து வருவதால், அந்நிறுவன ஊழியர்கள் வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கோவை : கோவையில் தனியார் நிறுவனத்தின் நடப்பு கணக்கிலிருந்து கடந்த ஆண்டு ஸ்கிம்மர் கருவி மூலம் திருடப்பட்ட 80 ஆயிரம் ரூபாயை வங்கி நிர்வாகம் தராமல் காலதாமதம் செய்து வருவதால், அந்நிறுவன ஊழியர்கள் வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஸ்கிம்மர் கருவிகள் உதவியுடன் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து கொள்ளை போகும் சம்பவங்கள் அரங்கேறி வந்தது. இப்படி நடைபெற்ற கொள்ளை சம்பவங்களால் லட்சக்கணக்கான ரூபாய்கள் பறிபோனது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் பணங்கள் இதுவரை கிடைக்காதது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தனியார் நிறுவனம் நடத்தி வரும் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஸ்கிம்மர் கருவி மூலம் திருடப்பட்ட பணங்கள் இன்னும் தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறி அவர் சார்ந்த வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

இது குறித்து ராஜேஸ் கூறியதாவது :- கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி எனது ஏ.டி.எம்.மில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக எனது செல்போனிற்கு குறுஞ்செய்தி வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நான் உடனடியாக வங்கி மற்றும் காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தேன். இதனையடுத்து எனது பணம் மும்பையில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். எனது பணம் குறித்து வங்கியிடம் கேட்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்ததையடுத்து, யுனைடெட் வங்கியை நாடி பலமுறை பணம் கேட்டேன். ஆனால், தொடர்ந்து அவர்கள் என்னைப் புறக்கணித்து வந்தனர். இதனால், எனது பணம் கிடைக்கும் வரை வங்கிக்குள் இருந்தே, பணி செய்து கொண்டே போராட்டத்தில் ஈடுபடுவேன், என தெரிவித்தார்.

பணத்தை பறிகொடுத்த வாடிக்கையாளர் அவர் நிறுவனத்தினருடன் சேர்ந்து வங்கியில் பணி செய்து கொண்டே தர்ணா போராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.