நிபா வைரஸ் பரவுவதை தடுக்க நீலகிரியில் தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு

நீலகிரி : தமிழக - கேரள எல்லைப் பகுதியான கூடலூரில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக சுகாதாரப் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி : தமிழக - கேரள எல்லைப் பகுதியான கூடலூரில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக சுகாதாரப் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். 



நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தமிழக - கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவியதாக வந்த தகவலையடுத்து, இங்குள்ள சோதனை சாவடியில் சுகாதார அதிகாரிகள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது, ராம்ஜான் பண்டிகை முடிந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இந்த வழியாக உதகை, குன்னூரில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகின்றனர். இவர்களுக்கு நிபா வைரஸ் குறித்து விழிப்புணர்வும், அதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி துண்டறிக்கையும் வழங்கப்படுகிறது.



மேலும், சாலையோரங்களில் விற்கப்படும் பழங்களை வாங்கும் போது, அந்த பழத்தை நன்றாகக் கழுவிய பின்பு உண்ண வேண்டும் என்றும், ஏதாவது பறவைகள் பழத்தை உட்கொண்ட அறிகுறி தெரிந்தால் அதை உண்ண வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதார அதிகாரிகள் விளக்கினர். இப்பகுதியில் உள்ள 7 சோதனை சாவடியிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில், மருத்துவக் குழு, சுகாதாரக் குழு, வருவாய் துறையினர் என பலரும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...