இயற்கை விவசாயத்திற்கு மாறி வரும் நீலகிரி விவசாயிகள் : இயற்கை உரம் தயாரிப்பிற்கான ஊக்கத்தை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இயற்கை உரம் தயாரிக்க மாவட்ட நிர்வாகம் ஊக்கப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இயற்கை உரம் தயாரிக்க மாவட்ட நிர்வாகம் ஊக்கப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நீலகிரியில் உள்ள விவசாயிகள், இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். விளைபொருட்கள் உற்பத்திக்கு, பெரும்பாலும் ரசாயன இடு பொருட்களைப் பயன்படுத்தியதால் மண்வளம் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்த விவசாயிகள், இதிலிருந்து மீண்டு மண்வளம் மற்றும் விவசாய நிலத்தைப் பாதுகாக்க, இயற்கை முறையில் காய்கறி, உற்பத்திக்கு மாறி வருகின்றனர். இயற்கை விவசாயத்துக்கு மாறும் வகையில், விவசாய நிலங்களைப் பதப்படுத்தி, உயிர் உரமாக சாண உரம் மற்றும் மண்புழு உரம் இவற்றைப் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ரசாயன உர பயன்பாட்டால், மண்ணின் தன்மை மாறி வருவதுடன், மகசூல் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இதற்கு மாற்றாக ரசாயன உரத்தை குறைத்து, மீண்டும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் இறங்கி வருகின்றனர். 



இது குறித்து தோட்டக்கலை துறையினர் கூறுகையில், "விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவதைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு விவசாய திட்டங்கள் மூலம் பயன்பெறும் விவசாயிகளுக்கு, தேவையான இயற்கை உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இயற்கை இடுபொருட்கள் தேவையுள்ளவர்கள், விவசாய நிலத்தின் பட்டா, சிட்டா நகலுடன் எங்களிடம் விண்ணப்பித்தால், அரசு திட்டம் மூலம், இயற்கை இடு பொருட்கள், மானிய விலையில் வழங்கப்படும், என்றனர்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...