நீலகிரி : உதகையில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயல்பட்டு வந்த 3 கடைகளை பூட்டி சீல் வைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

உதகை மார்க்கெட் பகுதியினை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது, பல கடைகளுக்கு முன்பு சுகாதார சீர்கேடு கண்டறியப்பட்டது குறித்து அறிவுரை வழங்கினார். மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மிகவும் மோசமாக பராமரிக்கப்பட்டு வந்த சில கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் சுகாதார சீர்கேட்டை விளைவித்த 3 கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.