கோவை : சேரன்மாநகர் அருகே கட்டுமானப் பணிகளுக்கு இடையூறாக பொது இடத்தில் இருந்த 20 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்டும் பணியை தன்னார்வலர்கள் தடுத்து நிறுத்தினர்.

சேரன்மாநகர் அருகே கட்டுமானப் பணிகளுக்கு இடையூறாக பொது இடத்தில் இருந்த 20 ஆண்டுகள் பழமையான தூங்குவாகை மரத்தை சிலர் வெட்ட முயன்றனர். இது குறித்து சிறுதுளி அமைப்பைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் ஓசை அமைப்பினர் சையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, வருவாய் வட்டாட்சியருக்கு சையத் அளித்த தகவலின் பேரில், அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, மரம் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அத்தியாவசியமாக மரங்கள் இருக்கும் நிலையில், ஒற்றை மரத்தை காப்பாற்றிய வருவாய்த்துறை, சமூக ஆர்வலர்களின் இந்த செயலை பல்வேறு தரப்பினர் வெகுவாக பாராட்டினர்.