கோவை : கோவையில் குடும்பத்தகராறு காரணமாக மகனுக்கு விஷம் கொடுத்து தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துவிட்டு, தந்தையும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தாபுரத்தை சேர்ந்தவர்கள் அர்ஜூனன் (46) மற்றும் அலமேலு தம்பதியனர். அர்ஜூனன் வீட்டு அருகிலேயே டெய்லர் கடை வைத்துள்ளார். இவரது மகன் யோகேஷ் (13). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அலமேலு வெளியே சென்று இருந்தார். பின்னர், இரவு வீடு திரும்பிய போது, கணவரும், மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து வந்த சரவணம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், அர்ஜூனனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதையடுத்து, மனமுடைந்த அர்ஜூனன், மகன் யோகேஷூடன் சேர்ந்து தற்கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. அதன்படி, வீட்டில் யாரும் இல்லாத போது, அர்ஜூனன் சாணி பவுடரை கரைத்து தனது மகனுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார். அதன் பின்னர், யோகேஷை தூக்கில் தொங்க வைத்து விட்டு, அவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த சரவணம்பட்டி போலீசார், தந்தை, மகன் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.