திருப்பூர் : நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்றைய முன்தினம் வெளியான நிலையில், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதாக திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ உட்பட 3 மாணவிகள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.

அப்போது, போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டத்தில் திருப்பூர் - பல்லடம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.