கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணையில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில், குரங்குகள் நூற்றுக்கணக்கான பலா பழங்களை மரத்திலேயே வீணாக்கி வருவதால் பண்ணை ஊழியர்கள் கவலையடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் பகுதியில் அரசுக்கு சொந்தமான 25 ஏக்கரில் தோட்டக்கலைத்துறையின் பழப்பண்ணை உள்ளது. நீலகிரி மலையடிவாரத்தில் ஆண்டு முழுவதும் சீரான சீர்தோசம் நிலவும் இக்கல்லார் பழப்பண்ணையில் அரிய வகை பழங்களான மங்குஸ்தான், துரியன், ரம்புட்டான், மலேயன் ஆப்பிள், முட்டைப்பழம், லிட்சி உள்ளிட்டவைகளும் விளைகின்றன. மேலும், இப்பண்ணையில் 60-க்கும் மேற்பட்ட பலா மரங்களும் உள்ளன. தற்போது, இப்பழப்பண்ணையில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் இப்பலா மரங்களில் கொத்துக்கொத்தாய் காய்கள் காய்த்து நன்கு வளர்ந்து காட்சியளிக்கின்றன.

கடந்தாண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பலா மரங்களில் அதிக அளவு பலா காய்கள் பிடித்துள்ள நிலையில், இவற்றை அறுவடை செய்து விற்பனை செய்யும் பணிகளும் துவங்கி உள்ளன. ஆனால், இவ்வாண்டு வனப்பகுதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருவதால், உணவு கிடைக்காமல் குரங்கள் இந்த பல பண்ணைக்கு படையெடுக்க துவங்கிவிட்டன. சீசன் துவக்கம் முதலே பகல் நேரங்களில் குரங்கு கூட்டங்களும் பண்ணைக்குள் புகுந்து பலாப்பழங்களை சேதப்படுத்தி வருகின்றன. குரங்குகள் மரத்தின் மீதேறி பழங்களை கடித்து குதறி விடும் நிலையில், இரவு நேரங்களில் நுழையும் யானைகளோ பலா மரங்களையே சாய்த்து விட்டு, பின்னர் பழங்களை உண்ண முயற்சிப்பதால் கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது.

அதிக சுவையுடைய இப்பலாப்பழங்களை பறித்து கிலோ பத்து ரூபாய் என விற்பனை செய்யப்படுவதால் இவற்றை வாங்க பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பழங்கள் நன்கு பழுக்கும் முன்பே குரங்குகள் இவற்றை கடித்து விடுவதால் பயனற்று போய் விடுகின்றன. அன்றாடம் பலா மரங்களின் மீது படையெடுக்கும் இந்த குரங்குகளைக் கட்டுப்படுத்த முடியாமல் பண்ணை ஊழியர்கள் திணறிவருகின்றனர். மேலும், தனது நுகர்வு திறனால் பலாப்பழங்களை தேடி பண்ணைக்குள் நுழையும் யானைகளால் பலா மரங்கள் சேதமடைவதாகக் கூறும் பண்ணை ஊழியர்கள், இவற்றை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுகின்றனர்.