சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

சேலம் : சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


சேலம் : சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் ரூ. 320 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு மேம்பாலத்தில் ஒரு தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார். இன்னும் 6 மாத காலத்துக்குள் இரண்டாம் தளமும் திறக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த விழாவில், தி.மு.க. எம்.பி., எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் நல்ல தீர்ப்பு வந்தவுடன் 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும். எந்த ஒரு தனிநபருக்காகவும் 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படவில்லை. உலகத்தரத்திற்கு ஏற்ப சாலைகளை அமைக்கவே மத்திய அரசு 8 வழிசாலை திட்டத்தை அறிவித்தது. மக்களின் வசதிக்காகவே 8 வழி சாலைத் திட்டம். வளர்ச்சி, மேம்பாடு, சாலை விபத்துகளை தடுக்கவே 8 வழி சாலை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. யாருடைய நிலத்தைப் பறித்தும் அரசு திட்டத்தை நிறைவேற்றாது. எதிர்ப்பு தெரிவிப்பவர்களை சமாதானப்படுத்தியே திட்டம் நிறைவேற்றப்படும்.



தமிழகம் சாலை வசதிகளில் முதன்மை மாநிலமாகத் திகழும். சேலத்துக்கு அருகே 60 ஏக்கர் நிலப்பரப்பளவில் பஸ்போர்ட் அமைக்க திட்ட அறிக்கை தயாராகிப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...