நீண்ட போராட்டத்திற்கு பின்பு வனகிராமங்களுக்கு மின் கம்பம் அமைத்தது கோட்டூர் பேரூராட்சி ; மலைவாழ் மக்கள் சங்கம் மகிழ்ச்சி

கோவை : தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நீண்ட போராட்டத்திற்கு பின்பு வன கிராமங்களான சின்னார்பதி மற்றும் ஆழியார் அன்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் 21 மின் கம்பங்கள் கோட்டூர் பேரூராட்சியின் சார்பில் நேற்று நடப்பட்டது.

கோவை : தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நீண்ட போராட்டத்திற்கு பின்பு வன கிராமங்களான சின்னார்பதி மற்றும் ஆழியார் அன்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் 21 மின் கம்பங்கள் கோட்டூர் பேரூராட்சியின் சார்பில் நேற்று நடப்பட்டது.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை தாலுகா விற்குப்பட்ட ஆழியார் அடுத்த ஆழியார் அன்பு நகர் மற்றும் சின்னார்பதி வனகிராமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விளக்கு வசதி வேண்டி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நீண்ட வருடங்களாக தொடர் காத்திருப்பு போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும், சோதனைச்சாவடி முற்றுகை போராட்டங்களும் நடைபெற்றது.



மேலும், கடந்த 2018 ம் ஆண்டு மே மாதத்தில் சின்னார்பதி உள்ளிட்ட வனக்கிராமங்களுக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி உடனடியாக செய்துதரக்கோரி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ. சண்முகம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ். பரமசிவம் மற்றும் அப்போதைய சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சிறப்பு வட்டாட்சியர் ஜெயசித்ரா ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.



பேச்சுவார்த்தையில் வன கிராமங்களான ஆழியார் அன்பு நகர் மற்றும் சின்னார்பதி, புளியகண்டி, நவமலை உள்ளிட்ட வனகிராமங்களுக்கு உடனடியாக மின்சார வசதி செய்து தர வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர், கோட்டூர் பேரூராட்சியின் கீழ் மின் விளக்கு வசதிசெய்து தர நிதி ஒதுக்கியது. இதனையடுத்து, புளியகண்டி பகுதியில் 12 தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டது. தற்போது, வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் உயர்ந்த மலைக்குன்றுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நவமலை மற்றும் சின்னார்பதி வன கிராமங்களில் தொடர் வன விலங்குகளின் அச்சுறுத்தலால், மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பின்னர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் சின்னார் பதி உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு மின் வசதி வேண்டி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில், ஓராண்டு கழித்து நேற்று, வன கிராமங்களான சின்னார்பதி மற்றும் ஆழியார் அன்பு நகர் வாய்க்கால் மேடு உள்ளிட்ட பகுதிகளில் 5,20,000 மதிப்பீட்டில் மின் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில், 21 மின்கம்பங்களும் , 32 மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளதாக கோட்டூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் வில்லியம் ஜேசுதாஸ் கூறினார்.



“நீண்ட காலமாக மின்விளக்கு வசதி ஏற்படுத்தித்தரக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தது. இதன் தொடர்ச்சியாகவே இன்று எங்கள் வன கிராமமான சின்னார்பதி மற்றும் ஆழியார் அன்புநகர், வாய்க்கால் மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வசதி கிடைத்துள்ளது. இது மிகவும் மலைவாழ் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கழிப்பிடம், தொகுப்பு வீடு , உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தமிழக அரசு விரைந்து செய்து தர வேண்டும்,” என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி,எஸ்.பரமசிவம் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...