கோவை : மும்மொழி கொள்கையை தான் எந்த இடத்திலும் ஆதரிக்கவில்லை எனவும், இருமொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை : மும்மொழி கொள்கையை தான் எந்த இடத்திலும் ஆதரிக்கவில்லை எனவும், இருமொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- சேலத்தில் நாளை போக்குவரத்து நெரிசலை குறைக்க இரட்டை அடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதி திறக்கப்பட உள்ளது. பருவமழை பொய்த்ததன் விளைவாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தேர்தலுக்கு முன்பாகவே ஆலோசனைக் கூட்டம் நடத்தி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். மேலும், குடிநீர் பிரச்சனையை தீர்க்க போதிய நிதி ஒதுக்கி தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் எனவும் கூறியதை அரசியல் கட்சிகள் கண்டிக்கவில்லை. ஜூன் மாதத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை குறுவை சாகுபடிக்கு கர்நாடக திறக்கும் என நம்புகிறோம். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருக்கிறது. பத்திரிக்கைகள் பெரிதுபடுத்தி குளிர் காய நினைக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் நிற்காமல் குறைந்த தொகுதியில் போட்டியிட்டதால் தான் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதே தவிர, அ.தி.மு.க.விற்கு வாக்கு வங்கி குறையவில்லை. தி.மு.க. நடைமுறைபடுத்த முடியாத பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது.
மும்மொழி கொள்கையை ஆதரிப்பதாக எந்த இடத்திலும் தான் சொல்லவில்லை. டெல்லியில் சில பத்திரிகையாளர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் தான், தமிழை பிற மாநிலங்களில் விருப்ப பாடமாக சேர்க்க வேண்டுமென பிரதமருக்கு டிவிட்டரில் கோரிக்கை வைத்தேன். மேலும், இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக தனது டிவிட்டர் கருத்து திரிக்கப்பட்டுள்ளது. டிவிட்டரில் போட்ட போதே இவ்வளவு சர்ச்சை வந்ததால்தான், டிவிட்டரில் இருந்து அந்த பதிவை நீக்கினேன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை தவிர மீதம் 6 பேரை விடுதலை செய்யக்கூடாது என அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்தார். அதை எதிர்கட்சிகள் ஏன் கேட்கவில்லை. மேலும், அ.ம.மு.க.வில் இருந்து விலகி பலர் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர், என அவர் கூறினார்.