திருப்பூர் : நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீயின் குடும்பத்தாருக்கு கோவை தொகுதி எம்.பி. பி.ஆர். நடராஜன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

வெள்ளியங்காட்டில் உள்ள மாணவி ரிதுஸ்ரீயின் வீட்டிற்கு கோவை தொகுதியின் எம்.பி., பி.ஆர். நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் கே. உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்றனர். அங்கு ரிதுஸ்ரீயின் தந்தை செல்வராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு பி.ஆர்.நடராஜன் ஆறுதல் கூறினார்.

"மாணவியின் உயிரிழப்பு வேதனைக்குரியது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் போராடி வருகிறோம்," என அப்போது எம்.பி., பி.ஆர்.நடராஜன் கூறினார்.