நீலகிரி : கூடலூர் அருகே குடியிருப்புகளுக்கு அருகாமையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டெருமையால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுற்றிலும் வனப் பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டெருமை அங்கு சில நாட்களாக குடியிருப்பு அருகே சுற்றி வருகிறது. இந்த காட்டெருமை அவ்வப்போது விளைநிலங்களை நெருங்கியும், இங்குள்ள மயானம் உள்ளிட்ட பகுதியில் உலா வருகிறது. இதனால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என அங்குள்ள குடியிருப்பில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.

எனவே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இந்த காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.