நீலகிரியில் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை : முதன்மை கல்வி அதிகாரி தகவல்

நீலகிரி : நீலகிரியில் மாணவர்கள் குறைவாக உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசருதீன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : நீலகிரியில் மாணவர்கள் குறைவாக உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசருதீன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கின்ற காரணத்தினால், அந்தப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை வேறு பள்ளியுடன் இணைத்து ஒரே பள்ளியாக செயல்படுத்துவதோடு, மீதமுள்ள சில அரசுப் பள்ளிகளை மூடுவதாக தகவல்கள் வெளிவந்தன. 



இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசருதீனிடம் கேட்டபோது, "குறைவாக உள்ள மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பணிகள் நிறைவுற்ற பிறகு பள்ளிகளை இணைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.

இது குறித்து குன்னூர் கல்வி மாவட்ட அதிகாரி அம்பிகாபதி கூறுகையில், "ஆரம்ப பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும். நடுநிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், மேல்நிலைப் பள்ளிகளில் 40 பேருக்கு ஒரு ஆசிரியரும், மேலும் அனைத்து பள்ளிகளிலும் ஒரு தலைமை ஆசிரியர் இருப்பது அவசியம் என அரசு விதிகள் உள்ளன. ஆனால், சில அரசு பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் இருப்பதால், இவற்றில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்கிறோம். குறைவாக மாணவர்களைக் கொண்ட கிராமப்புற பள்ளிகளை வேறு அரசு பள்ளிகளுடன் இணைக்கும் போது, போக்குவரத்து பிரச்சினைகள் இருப்பதால், இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்து வருகிறார்," எனத் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...