சிங்காநல்லூர் குளத்தில் இயற்கை கல்விக்காக கோவை மாநகராட்சி - குயிப் அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை : சிங்காநல்லூர் குளப்பகுதியில் இயற்கை கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குயிப் அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


கோவை : சிங்காநல்லூர் குளப்பகுதியில் இயற்கை கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குயிப் அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.



உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிங்காநல்லூர் குளப்பகுதியில் 2019-20 ஆம் ஆண்டுக்கான இயற்கை கல்வியை கோவை மாநகராட்சி ஆணையரும், குயிப் அமைப்பின் தலைவருமான ஸ்ரவன் குமார் ஜாவத் தொடங்கி வைத்தார். இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. கோவை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, வாரத்தில் 3 நாட்கள் (திங்கள், புதன் மற்றும் வெள்ளி) இயற்கை கல்வி கற்பிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மாநகராட்சி பள்ளிகளுடன் சேர்த்து தனியார் பள்ளிகளின் மாணவர்களும் சேர்ந்து மொத்தம் 6,000 பேர் இயற்கை கல்வியை பயின்றனர். 



தற்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி சிங்காநல்லூர் குளப் பாதுகாப்பில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் குயிப் அமைப்பிற்கு, தற்போது, மருத்துவ தாவர பூங்கா அமைத்தல், பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் நர்சரி ஆகியவற்றை அமைக்கும் பணிகளையும் கூடுதலாக மேற்கொள்ள முடியும். மேலும், விழிப்புணர்வு பதாகைகளும், காலநிலை மையமும், அரங்கு மற்றும் விளக்க மையங்களை அமைக்க அதிகாரம் கிடைத்துள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரன் குமார் தெரிவித்தார். 



"இதன் மூலம் பொதுமக்கள் குளத்திற்கு வந்து இயற்கையுடன் ஒன்றி இருக்கும் வாய்ப்பு ஏற்படும். இதனால், குளத்தின் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ள முடியும். இதுபோன்ற நடவடிக்கைகளினால், குளப்பகுதியில் உள்ள பல்லுயிர்களை பாதுகாக்கப்படும். மேலும், இந்தக் குளம், நகர்ப்பகுதியில் உள்ள முன்மாதிரியான குளமாக உருவாக்க முடியும்," என்றார். 



மேலும், குயிப் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார், சிங்காநல்லூர் குளத்தில் உள்ள பல்லுயிரினங்கள் பற்றிய அறிவியல் புள்ளிவிவரங்கள் உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என்றும், சட்டவிரோதமாக தடையை மீறி வர்த்தக ரீதியில் மீன் பிடிக்கும் சம்பவங்களுக்கு தடை விதிக்கப்படும் என அவர் கூறினார். கடந்த 2018-ம் ஆண்டு சிங்காநல்லூர் குளத்தில் மீன்பிடிப்பதற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தடை விதித்துள்ள நிலையில், வர்ததக ரீதியிலான மீன்பிடிப்பு இங்கு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 



முன்னதாக, குயிப் அமைப்பின் துணைத் தலைவரும், வனத்துறை அதிகாரியுமான டி வெங்கேடஷ், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவதாக கூறினார். மேலும், மாணவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் இருந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குளப்பகுதிகளில் மருத்துவ தாவர பூங்கா திறக்கப்பட்டது. மேலும், குளத்தின் கரைகளில் விதைப்பந்துகளை வீசப்பட்டது. 



இந்த நிகழ்ச்சியில், கோவை வனஉயிர் வார்டன் சி. பத்ரசாமி, கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் எஸ். பிரசன்னா ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...