கோவை கொடிசியாவில் 'இன்டெக் 2019' தொழிற்கண்காட்சி தொடக்கம்

கோவை : கோவை மாவட்டத்தில் 5 நாட்கள் நடக்கும் தொழிற்கண்காட்சி 'இன்டெக் 2019' கொடிசியா மைதானத்தில் இன்று தொடங்கியது.

கோவை : கோவை மாவட்டத்தில் 5 நாட்கள் நடக்கும் தொழிற்கண்காட்சி 'இன்டெக் 2019' கொடிசியா மைதானத்தில் இன்று தொடங்கியது. 



இந்தியாவின் 2-வது மிகப்பெரிய தொழிற்கண்காட்சியாக 19-வது இன்டெக் கண்காட்சி கொடிசியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 10-ம் தேதி நடைபெறும் இந்த தொழிற்கண்காட்சியை சிறப்பு விருந்தினர்களான சைகுயிரெக்ஸ் தலைவர் பத்மஸ்ரீ எம்.கே. நாராயணன் மற்றும் டிஜிட்டல் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உதயந்த் மல்கோத்ரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். 



இந்தக் கண்காட்சியில் ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனத்தினர் தங்களது நிறுவன தயாரிப்புகளை அரங்குகள் அமைத்து பார்வைக்கு வைத்துள்ளனர். 5 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வர்த்தகர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 



"இந்தக் கண்காட்சியின் முதல் நாளிலேயே நல்ல வரவேற்பு உள்ளது. கண்காட்சியின் கடைசி நாளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்வையிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்கின்றனர் ஒருங்கிணைப்பாளர்கள்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...