கோவை : 112 நாட்களுக்குப் பிறகு காணாமல் போன முகிலனைப் பற்றிய துப்பு கிடைத்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமாகி இன்றுடன் 112 நாட்கள் ஆகிறது. மேலும், அவரை கண்டுபிடித்துத் தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, முகிலன் வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முகிலன் வழக்கு விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளதாகவும், அதனை வெளியில் கூறினால் விசாரணை பாதிக்கப்படும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.