திருப்பூர் : நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று திருப்பூரில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு அஞ்சலி செலுத்திய பின் திருப்பூர் எம்.பி சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வில் தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவ ரிதுஸ்ரீயின் உடல் உடற்கூறாய்வு சோதனைக்குப் பின் மின்மயானம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு, திருப்பூர் எம்.பி சுப்பராயன் மாணவியின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு எத்தனை தமிழ் மகள்களை பலி கொள்வார்கள் என்று தெரியவில்லை. நீட் மூலம் மாணவிகளை வடிகட்டுவது என்பது இன்றைய பா.ஜ.க. அரசின், வர்ணாசிரம கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.
நாள் வர்ணங்களில், மேல் வர்ணம் மட்டும்தான் கல்வி கற்க வேண்டும். மேல் வர்ணம் மட்டும் தான் எல்லா பதவிகளையும் கைப்பற்ற வேண்டும். கீழே இருப்பவர்கள் மேல் வர்ணத்திற்கு வேலை செய்ய மட்டுமே கடமைப்பட்டவர்கள் என்ற அடிப்படை கண்ணோட்டத்தில் இருந்து தான் நீட் கொண்டு வரப்பட்டிருக்கிறது. நீட் தேர்வை முற்றிலுமாக முடக்க வேண்டும். தமிழ் மகள்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். இந்த அநியாயத்தை எதிர்த்துப் போராட வேண்டும். உயிர் பலிக்கு நாம் இரையாகக் கூடாது. மத்திய அரசாங்கம் இன்னமும் வர்ணாசிரம கண்ணோட்டத்தோடு தமிழ்நாட்டை வஞ்சிக்கிற நீட் தேர்வின் மூலம் பலி கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நீட் தேர்வின் மூலம் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக நின்று நாடாளுமன்றத்திலும் போராடுவோம். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தார் மிகவும் சாமானிய பட்டவர்கள், ஒற்றை குழந்தையை பறிகொடுத்த பெற்றோரின் சாபத்திலிருந்து மத்திய அரசு தப்பிக்க முடியாது. எனவே, மாநில அரசு உயிரிழந்த மாணவியின் பெற்றோரின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்குவதோடு, முழு நிவாரணம் வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.