சென்னை : தமிழகத்தில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருப்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் வங்கிகள், கடைகள், திரையரங்குகள் 24 மணிநேரமும் செயல்படுவதற்கான அனுமதி அளிக்கும் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மேலும், கடைகளை 24 மணிநேரமும் இயக்குவதற்கு உரிய அனுமதியை மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம், கடைகள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் 24 மணிநேரமும் செயல்படுவதற்கு அனுமதி அளித்தது.
இதனிடையே, தமிழகத்தில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. குறிப்பிட்ட நிபந்தனைகள் அடிப்படையில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்க தொழிலாளர் ஆணையர் பரிந்துரை செய்திருந்தார்.
இந்த நிலையில், ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படும் என்பதற்கான தமிழக அரசு அரசாணையை இன்று வெளியிட்டது. கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும். கடைகள் இரவு நேரங்களில் செயல்படும் போது பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை பின்பற்றி 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்களை திறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.