கோவை : கருமத்தம்பட்டி அருகே சாலையில் வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காட்டுப் பூனை பரிதாபமாக உயிரிழந்தது.

சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் வாகனங்கள் அதிவேகமாக சென்று கொண்டே இருக்கும். இந்த நிலையில், தமிழ்நாடு பொறியியல் கல்லூரி அருகே சாலையின் ஓரத்தில் வாகனங்களில் அடிபட்ட காயங்களுடன் காட்டுப் பூனையின் சடலம் கிடந்தது. கேரளாவை இணைக்கும் இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், இதுபோன்ற சிறு உயிரினங்களைப் பாதுகாக்கும் வகையில், அவை சாலைகளை கடந்து செல்லும் விதமான பாதைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.