குன்னூர் பேருந்து நிலைய ஆற்றினை சுத்தம் செய்த கிளீன் குன்னூர் அமைப்பினர்

நீலகிரி : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குன்னூர் பேருந்து நிலையத்தை ஒட்டி ஓடும் ஆற்றில் உள்ள கழிவுகளை கிளீன் குன்னூர் அமைப்பு சார்பில் சுத்தம் செய்யப்பட்டது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

நீலகிரி : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குன்னூர் பேருந்து நிலையத்தை ஒட்டி ஓடும் ஆற்றில் உள்ள கழிவுகளை கிளீன் குன்னூர் அமைப்பு சார்பில் சுத்தம் செய்யப்பட்டது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

கிளீன் குன்னூர் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் பல்வேறு சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, குன்னூர் ஆற்றில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 



தூய்மைப் பணிகளுக்கு கிளீன் குன்னூர் அமைப்பின் அமைப்பாளர் சமந்தா அய்யண்ணா கூறியதாவது :- நீலகிரியில் நீர் ஆதாரங்கள் அழிந்து வருவது, 96 சதவீதம் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதால் மண்வளம் பாதிப்பு, இந்த ஆண்டு வரலாறு காணாத காட்டு தீயால் காற்று மாசு அடைந்துள்ளது. அதிக அளவு கட்டிடங்கள் காரணமாகவும், நீலகிரியில் உள்ள வனங்கள் வேகமாக அழிந்து வருவது கவலை அளிக்கிறது. மண் வளம் பாதிக்கப்பட்டு சிறு, சிறு மழைகள் பெய்தால் கூட நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டு வருவது அதிகரித்துள்ளது. 

இதனிடையே, இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குன்னூர் பேருந்து நிலையத்தை ஒட்டி ஓடும் ஆற்றில் பல்வேறு குப்பைகள் இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவதால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவ்வழியாக பயணிப்போர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு இந்த ஆற்றினை தூய்மை செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. இப்பணி பர்லியார் பகுதி வரை நீடிக்கும், என்றார். 

இந்த தூய்மைப் பணியில் மருத்துவர் வசந்தன், பிரசன்னன் மப்சாவன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...